மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலி ஆவணத்துடன் 25 ஏக்கர் நிலம் அபகரிப்பு முயற்சி.. கேடி கும்பலில் 3 பேர் கைது.. ஆப்படித்த அரசு அதிகாரிகள்.!
25 ஏக்கர் நிலத்தினை போலியான ஆவணங்கள் மூலமாக அபகரிப்பு செய்ய முயன்ற கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய 4 பேருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ள சம்பவம் கொடைக்கானலில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், அப்சர்வேட்டரி வைட்ரா பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. இவருக்கு சொந்தமாக 25 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், ராஜலட்சுமி கடந்த 2000 வருடம் இருந்துவிட்டார், அவரின் வாரிசுதாரரான சந்தான லட்சுமி என்பவரின் பெயருக்கு 25 ஏக்கர் இடம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது என சான்றிதழ்கள் வழங்கியுள்ளது.
மேலும், குறிப்பிட்ட 25 ஏக்கர் நிலத்தினை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் வசித்து வரும் அப்துல் காதர் என்பவருக்கு கிரையம் செய்து கொடுக்கவும் ஆவணங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு பத்திரத்தின் முத்திரை மற்றும் அலுவலர் கையொப்பத்தின் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அசல் ஆவணபதிவில் பழைய பத்திரகோப்புகள் சரிபார்த்தபோது, 6 பேர் கும்பல் தந்த ஆவணங்கள் போலியானது என உறுதியானது. இதனால் சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் சத்தமே இல்லாமல் கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், 6 பேர் கும்பலில் 3 பேரை கைது செய்தனர். தப்பி சென்றவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
விசாரணையில், சந்தானலட்சுமி என ஆள்மாறாட்டம் செய்தவர் சென்னையில் வசித்து வரும் லதா (வயது 53) என்பது உறுதியானது. மேலும், சென்னை வழக்கறிஞர் சுடலை, காயல்பட்டினம் முகமது அப்துல் காதர், கீழக்கரை முகமது, சென்னை மண்ணடியை சேர்ந்த முகமது ரபீக், கார் ஓட்டுநர் அத்திகூர் ரகுமான், முகேஷ் ஆகியோரும் வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது உறுதியானது.
இவர்களில் லதா, வாணியம்பாடி அத்திகூர் ரகுமான் (வயது 30), முகேஷ் (வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சார்பதிவாளர் அலுவலக சி.சி.டி.வி கேமிரா பதிவுகள் துணையுடன் பிறருக்கும் வலைவீசப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.