#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எனக்கு ஒரு நிமிடமா?.. எத்தனை பேருக்கு மணியடித்திருக்கிறேன் - திண்டுக்கல் லியோனி கலகலப்பு பேச்சு.!
அண்ணன் - தம்பியாக இருந்த வார்த்தைகளை ஒன்றுபோல கோர்த்து உடன்பிறப்பு என்பதை உருவாக்கி ஆண் - பெண் பேதத்தை ஒழித்தவர் கலைஞர் என்று லியோனி பேசினார்.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திண்டுக்கல் லியோனி பேசுகையில், "திண்டுக்கல் லியோனிக்கு ஒரு நிமிடமா?. நான் பலமேடைகளுக்கு சென்றுள்ளேன், எனக்கு ஒரு நிமிடம் கொடுத்த இடம் இதுதான். நான் தான் நடுவராக இருந்து நேரம் கொடுத்து மணியடிப்பேன். இன்று சுதா எனக்கு மணியடித்து இருக்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை எப்படி நடத்தப்படவேண்டும் என்பதற்கு இலக்கணமாக நமது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். அரசு கல்வியை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
மனிதன் வார்த்தைகளால் உயிர் வாழ்கிறான். அதுவே அவனின் சக்தி. ஒருவார்த்தை கொல்லும், ஒருவார்த்தை வெல்லும். கொல்லக்கூடிய வார்த்தைகளை மக்களிடம் பேசவேண்டாம். வெல்லக்கூடிய வார்த்தைகளை மக்களிடம் சேருங்கள். அண்ணா திமுகவை தொடங்குகையில் அண்ணன் - தம்பியாக இயக்கம் இருந்தது. கலைஞர் உடன்பிறப்புகளே என்பதை கண்டறிந்தார்" என பேசினார்.