#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கேள்வி கேட்ட வழக்கறிஞர் மீது தாக்குதல் முயற்சி.. மாதர் சங்க போராட்டத்தில் சர்ச்சை.!
பாலியல் வழக்கில் சிக்கிய நர்சிங் கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்த, இதனை போல உள்ள பிற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக எதற்காக குரல் கொடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பிய வழக்கறிஞரை விரட்டி தாக்க முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முத்தனம்பட்டி நர்சிங் கல்லூரியில் பயின்றுவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது இரண்டு போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 4 ஆம் தேதி மகிளா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த விசயத்திற்கு கண்டிப்பு தெரிவித்து மகிளா நீதிமன்றம் முன்பாக, மாதர் சங்க நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் போது, தன்னுடைய வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர் தெய்வேந்திரன் என்பவர், இளம்பெண் ஒருவரை அழைத்து வந்துள்ளார்.
அவர் இளம் பெண்ணுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்க நிர்வாகிகள் அருகே சென்று, இந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தகவலறிந்த மாதர் சங்கம் எந்த கண்டனமும் தெரிவிக்காத நிலையில், இங்கு என்ன போராட்டம் நடக்கிறது? என்று கேட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பாலபாரதி, அந்த பெண் எங்ககிட்ட வரவில்லை என்று பதிலளித்துள்ளார்.
இதனைக்கேட்ட வழக்கறிஞர், உங்களிடம் வந்தால் தான் குரல் கொடுப்பீர்களா?. இதுபோன்ற வழக்கில் யாரின் தூண்டுதலின்பேரில் போராட்டம் நடத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதால் சர்ச்சை எழுந்தது. இதனால் மாதர் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞரை நோக்கி ஆவேசமாக கோஷம் எழுப்ப, ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் இருந்த சில நபர்கள் சேர்ந்து வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு நீடித்தது.
வழக்கறிஞரை கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் கோசம் எழுப்பிய நிலையில், சில தோழர்கள் மாதர் சங்கத்தினருக்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞரை அடிக்க பாய்ந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி வழக்கறிஞரை நீதிமன்ற வளாகத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதன்போதும் விடாத இரண்டு பெண்கள், காவல்துறையினரையும் மீறி வழக்கறிஞரை விரட்டிச் சென்று கையை பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளனர்.
பின்னர் தெய்வேந்திரன் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று விட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் தெய்வேந்திரன், "மாதர் சங்கத்தினர் அனைத்து பெண்களுக்கும் குரல் கொடுப்பது இல்லை. என் கட்சிக்காரர் இளம்பெண் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அது தொடர்பான புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது போன்ற பல விஷயங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பெண்களுக்கும் மாதர் சங்கம் குரல் கொடுப்பதில்லை. இதனை கேட்டதற்கு நீ தாக்க வருகிறார்கள்" என்று தெரிவித்தார். காவல்துறையினர் இது தொடர்பாக தெரிவிக்கையில், மாதர் சங்கத்தில் போராட்டத்தில் கேள்விகள் எழுப்பியது பிரச்சனை இல்லை. கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் ஒரு தரப்பு அடையாளத்துடன் தோற்றமளிப்பதால், எதிர்தரப்பு தோழர்கள் அவர்கள் அவரின் மீது எதிர்ப்பு காட்டியதாகவும் தெரிவிக்கின்றனர்.