மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குப்பைத்தொட்டியில் பிறந்து 2 மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்பு.. திண்டுக்கல் அருகே அதிர்ச்சி.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நேற்றிரவு பொதுமக்கள் பேருந்துக்காக காத்துகொண்டு இருந்தனர். முழு ஊரடங்கு காரணமாக பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.
அப்போது, அங்கிருந்த குப்பை தொட்டி ஒன்றில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குப்பை தொட்டி அருகே சென்று பார்த்தபோது, கட்டைப்பையில் துணியில் சுற்றியவாறு பச்சிளம் பெண் சிசு அழுதுகொண்டு இருந்தது.
கடுமையான குளிரில், ஈக்கள் மொய்க்கப்பட்டு தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் குழந்தை இருந்துள்ளது. இதனால் குழந்தை பிறந்து 2 மணிநேரம் ஆகலாம் என தெரியவந்த நிலையில், இதுகுறித்து இடையகோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மேலும், குழந்தையை யார் வீசி சென்றார்? தவறான உறவால் குழந்தை பிறந்ததா? அல்லது காதல் வயப்பட்ட இளம்பெண்ணுக்கு பிறந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.