#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவன்.. மனைவியின் விபரீத முடிவால் பலியான உயிர்.. கண்ணீரில் பிள்ளைகள்.!
தனது அன்பார்ந்த கணவன் கள்ளக்காதலை கைவிட மறுத்து தகராறு செய்ததால், விரக்தியடைந்த மனைவி விஷக்கிழங்கை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி, புதுத்தெரு பகுதியில் வசித்து வருபவர் ஆண்டிச்சாமி. இவரின் மனைவி அழகுமீனா (வயது 33). இவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஆண்டிச்சாமிக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் ஆண்டிச்சாமியின் மனைவிக்கு தெரியவரவே, அவர் தனது கணவரை கண்டித்து இருக்கிறார். கணவரோ கள்ளக்காதலை கைவிட இயலாது என்று கூறி பிரச்சனை செய்துள்ளார்.
இதனால் தம்பதியடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக அழகு மீனா விஷக்கிழங்கை சாப்பிட்டு உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடமதுரை காவல் துறையினர், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆண்டிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.