திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
TNEB மின்வாரிய பணியாளர்களின் உச்சகட்ட அலட்சியம்; அக்கா-தம்பியான 2 குழந்தைகள் பரிதாப மரணம்.!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர், வடமதுரை பகுதியை சார்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி நல்லம்மாள். தம்பதிகளுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், கூரை வீட்டில் வசித்து வரும் தம்பதிகளின் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாகவே மின்வாரிய ஊழியர்களுக்கு புகார் அளித்தும் பலனில்லை. சம்பவத்தன்று வீட்டில் மின்கசிவு ஏற்பட்ட நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கு தொடர்பு கொண்ட போது, மெயின் பியூஸ் கேரியரை மட்டும் எடுத்து வைக்குமாறு கூறியிருக்கின்றனர்.
பியூஸை எடுத்தபின்பும் வீட்டுக்குள் மின்சாரம் பாய்ந்த நிலையில், எதற்ச்சையாக அங்கு சென்ற சிறுவன், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்பியின் அலறல் சத்தம் கேட்டு அவனைக் காப்பாற்று அக்காவும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாரிகள் அலட்சியம் காரணமாக குழந்தைகள் பலியாகிவிட்டதாக பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர்.