மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கெத்து காட்டிய நாம் தமிழர் கட்சி.! சீமானை வாழ்த்திய சேரன்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான் ஆகிய 5 பேர் களமிறங்கினர்.
வாக்கு எண்ணிக்கையில், திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியமைக்கவுள்ளது. தி.மு.க - அ.தி.மு.க என முன்னணி கட்சிகளுக்கு அடுத்து பெரும்பான்மையான இடங்களில் 3 வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
மாற்று அரசியலை விரும்பி வாக்களித்து நாம் தமிழர் கட்சியை மூன்றாவது நிலைக்கு கொண்டு வந்திருக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
— Cheran (@directorcheran) May 3, 2021
நாதக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது.. @SeemanOfficial வாழ்த்துக்கள்.. pic.twitter.com/ADHt6tTY4h
இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "மாற்று அரசியலை விரும்பி வாக்களித்து நாம் தமிழர் கட்சியை மூன்றாவது நிலைக்கு கொண்டு வந்திருக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். நாதக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது.. வாழ்த்துக்கள் சீமான்" என பதிவிட்டுள்ளார்.