மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ரோஜாவின் கணவர், இயக்குனர் செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு.! போலீசார் தீவிர விசாரணை!!
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஆர்.கே செல்வமணி. அவர் புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, ராஜமுத்திரை, ராஜஸ்தான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
இவர் நடிகை ரோஜாவின் கணவர் ஆவார். ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமாக உள்ளார். மேலும் ஆர்.கே செல்வமணி பெப்சி திரைப்பட இயக்கத்தின் தலைவராக இருந்தார். தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
ஆர்.கே செல்வமணியின் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் விருகம்பாக்கத்தில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.