மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே நாளில் 2 முக்கிய பிரமுகர்களை இழந்துள்ள திமுக; பெரும் சோகத்தில் தொண்டர்கள்.!
திமுகவின் சார்பாக மாநிலங்களவையில் (1998 - 2004 ) வரை முன்னாள் எம்பியாக இருந்தவர் சிவசுப்பிரமணியன். திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர் 1989ஆம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது திமுகவில் சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். பல்வேறு அரசியல் கட்சிகள் சார்ந்த பிரமுகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாமணி(67). இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் எம்எல்ஏ ராதாமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை எம்எல்ஏ ராதாமணி காலமானார். இவர் திமுக அவைத்தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறாக ஒரே நாளில் இரு முக்கிய தலைவர்கள் உயிரிழந்த சம்பவம் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.