மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திமுக கட்சியில் இப்படி ஒரு விசுவாசியா!! ஸ்டாலின் முதல்வராக வேண்டி திமுக தொண்டர் செய்த விபரீதம்!!
திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என வேண்டிக்கொண்டு கூலித்தொழிலாளி ஒருவர் கைவிரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈட்டுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என வேண்டிக்கொண்டு கூலித்தொழிலாளி ஒருவர் கைவிரலை வெட்டிக்கொண்ட சம்பவம் சிவகாசி அருகே நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி குருவைய்யா (66). இவருக்கு திருமணம் முடிந்து மூன்று மகன்கள் உள்ளனர். தனது சிறுவயதில் இருந்தே குருவைய்யா திமுக கட்சி மீது விசுவாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக தோல்வி அடைந்தததால் கடும் விரக்தியில் இருந்த குருவைய்யா, திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென்று ஆண்டுதோறும் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வேண்டி வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும்நிலையில், இந்தமுறை எப்படியாவது திமுக வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என வேண்டிக்கொண்ட குருவைய்யா, இன்று அதிகாலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று, தனது கைவிரலை வெட்டி சாமிக்கு காணிக்கையாக கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருக்கன்குடி காவல்துறையினர் குருவைய்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக தொண்டரின் இந்த விசுவாசம் அங்கிருந்த மக்களிடையே சற்று அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
Video credites: polimer youtube