#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திமுக தலைவராக பதவி ஏற்கப் போகும் ஸ்டாலினுக்கு அளிக்கவிருக்கும் பரிசு என்னதெரியுமா?
ஸ்டாலினுக்காக தயாரான 11 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கருணாநிதி சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சமீபத்தில் காலமானார்.
அதனைத் தொடர்ந்து திமுகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மேலும் ஸ்டாலினுக்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர்களே நேரடியாக வெற்றி பெற உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.இதனை நாளை சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்.
இந்த நிலையில் திமுக தலைவராக போகும் ஸ்டாலினுக்கு 11 கிலோ எடையுள்ள முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட கருணாநிதியின் சிலையை சைதாப்பேட்டையை சேர்ந்த எம்எல்ஏ மா.சுப்ரமணியன் பரிசளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.