#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை: அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்.!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அவருக்கு சொந்தமான 40 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லி சவிதா கல்லூரி, அடையாறில் இருக்கும் எம்.பி-யின் வீடு, பாரத் பல்கலைக்கழகம், தி. நகர் நட்சத்திர விடுதி, ஆழ்வார்கள் ஆய்வு மையம் உட்பட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதலாகவே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 40 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
திமுகவில் முக்கிய புள்ளிக இருந்து வரும் ஜெகத்ரட்சகன், முந்தைய காலங்களில் மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரின் பெயரில் பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
சோதனையில் ஆயுதப்படை காவலர்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றனர். திமுக முக்கியப்புள்ளியின் வீடு, அலுவலகத்தில் நடக்கும் சோதனை அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.