திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தினமும் எவ்ளோ சிலிண்டர் யூஸ் பண்றீங்கனு தெரியனுமா?.. 1 மணிநேரத்திற்கு விலை, அளவின் தகவல் இதோ..!!
நமது வீட்டில் அன்றைய காலங்களில் தினமும் சமைக்க விறகு அடுப்பை பயன்படுத்தியிருப்போம். தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டவ் போன்றவற்றை உபயோகம் செய்து வருகிறோம். சிலிண்டரில் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
14.2 கிலோ எடை அளவுள்ள எரிவாயு சிலிண்டர் அடுப்பை ஒரு மணிநேரம் எரிய வைத்தால் இரண்டு பர்னரில் ஒரு மணிநேரம் அடுப்பை எரிய வைக்க 180 கிராம் எரிவாயு செலவாகிறது. அதே போல சிறிய பர்னரில் 138 கிராம் எரிவாயு செலவாகிறது.
சிறிய பர்னரை விட பெரிய பர்னர் 30 விழுக்காடு அதிகமாக எரிவாயு எடுத்துக் கொள்கிறது. இந்த சிலிண்டரை நாம் மாதம் ரூ.1200 கொடுத்து வாங்குகிறோம். அந்த வகையில் ஒரு கிலோ எரிவாயு ரூ.85 என்ற நிலையில் சிறிய பர்னரில் ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் ரூ.12 செலவழித்து எரிவாயு எரிக்கப்படுகிறது.
அதேபோல பெரிய பர்னரில் ரூ.15.3 செலவாகிறது. இரண்டு பர்னர்களையும் ஒரே நேரத்தில் பற்றவைக்கும் பட்சத்தில் ரூ.28 வரை செலவாகும். தினமும் மூன்று வேளை சமைக்க அடுப்பை எரியவைக்கும் பட்சத்தில் ரூ.50 வரை செலவாகலாம்.