மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த நடிகையை அபார்ஷனுக்கு அழைத்து வந்ததே அவர்தான்.. போட்டுடைத்த மருத்துவர்! முன்னாள் அதிமுக அமைச்சர் வழக்கில் புதிய திருப்பம்!!
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வந்த துணை நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக கடந்த மே மாதம் 28ஆம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் அவர், மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 5 வருடங்கள் தன்னுடன் குடும்பம் நடத்தியதாகவும், மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டால் அவர் கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து பெங்களூரில் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த மணிகண்டனின் மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்பொழுது அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வற்புறுத்தலால்தான் நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், மேலும் அப்பொழுது அந்த நடிகையின் முகத்தில் பல இடங்களில் காயம் இருந்ததாகவும் அதற்கும் தான் மருந்து போட்டதாகவும் கூறியுள்ளார்.
மணிகண்டன் சாந்தினியை தென் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு சாந்தினியுடன் தங்கியதற்கான சிசிடிவி வீடியோ உள்ளிட்ட சில ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக அந்த ஹோட்டலுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.