மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்கடிப்பதை கண்டித்த அத்தையை உருட்டுக்கட்டையால் கதறவிட்டு கொன்ற 17 வயது சிறுவன்.. இரத்த வெள்ளத்தில் நடந்த பயங்கரம்..!!
மது அருந்துவதை கண்டித்த அத்தையை 17 வயது சிறுவன், உருட்டுக்கட்டையால் அடுத்துக்கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 65). இவருக்கு திருமணமாகாத நிலையில், இவரது தம்பி கணேசனுக்கு திருமணமாகி மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் என இருமகன்கள் இருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னதாக கணேசன் இறந்துவிட்டதால், அவரது மனைவி கேரளாவுக்கு வேலைக்கு சென்றார்.
இதனால் அவரது இரண்டு மகன்களையும் அத்தையான அழகம்மாள் வளர்த்து வந்தார். இதனால் இருவரும் அத்தை அழகம்மாளுக்கு உதவியாக ஆடு மேய்க்கும் தொழிலும் செய்துவந்தனர். இந்நிலையில் 17 வயது சிறுவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதை தொடர்ந்து, அவரை அத்தை கண்டித்துள்ளார்.
மேலும், மது அருந்துவது குறித்து தனது அண்ணன் மணிகண்டன்தான் தனது அத்தையிடம் கூறியதாக கருதிய சிறுவன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்களை சமாதானம் செய்து மணிகண்டனை அழகம்மாள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் நேற்று இரவு அழகம்மாள் வீட்டில் தூங்கியிருந்தபோது, சிறுவன் கோபத்தில் உருட்டுகட்டையால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளான்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார். அத்துடன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அழகம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். சிறுவன் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.