மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை கொன்று, உடலருகே போதையில் உறக்கம்.. குடிகார கணவனின் வெறிச்செயலால் ஆடிப்போன அக்கம் பக்கம்.!
மது போதையில் மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்து, அருகிலேயே படுத்து உறங்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள வடக்கு மாங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 42). இவரது மனைவி தீபா (வயது 35). தம்பதிகளுக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில், தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்த் மிகவும் குடித்திருந்ததால், போதையில் மீண்டும் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது நடந்த சண்டையில் உருட்டுக்கட்டையால் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தீபா உயிரிழந்துள்ளார். ஆனால், மிகுந்த போதையில் இருந்த ஆனந்தனுக்கு இது தெரியாமல், அவரும் மனைவியின் அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார்.
தொடர்ந்து அவர்கள் வீட்டில் இரவே அதிகமாக சத்தம் கேட்ட நிலையில், காலை வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளனர். அப்போது தீபா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், ஆனந்தும் உடல் அசைவற்ற நிலையில் இருந்ததால், உடனடியாக இது குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீபா முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், ஆனந்த் மது போதையில் இருப்பதால் இன்னும் போதை தெளியவில்லை என்று அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி காவல் நிலையத்திற்கு கூட்டிசென்றனர். மேலும், தீபாவின் உடலை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் தீபாவின் உறவினர்கள் அவரை கொன்றதற்காக, ஆனந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தை கைது செய்துள்ளனர்.