மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையில் சென்றவர்களை சாக்கடையில் தள்ளி., ஆட்டோவோடு சாக்கடைக்குள் பாய்ந்த ஓட்டுநர்.. ஆல்கஹால் மீட்டரே ஃஆப் ஆகும் அளவிற்கு ஃபுல் போதை..!
போதையில் ஆட்டோ ஓட்டி சென்ற ஆசாமி சாலையோரம் நடந்து சென்ற மாணவி உள்ளிட்ட மூன்று பேரை இடித்து, ஆட்டோவுடன் சாக்கடைக்குள் பாய்ந்து சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் துடியலூர் காவல்நிலையம் எதிர்ப்புறம் உள்ள சாலையில் ஆட்டோ ஒன்று மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நடந்து சென்றவர்கள் மீது வேகமாக மோதி அவர்களை சாக்கடைக்குள் தள்ளியதோடு, ஆட்டோவும் சாக்கடைக்குள் பாய்ந்துள்ளது.
இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக சாக்கடைக்குள் விழுந்த பெரியவரையும், பள்ளி மாணவியையும் மீட்ட நிலையில், மற்றொருவர் தலை மற்றும் முகத்தில் ரத்தத்துடன் சாக்கடை கால்வாயோரம் மீட்கப்பட்டார். இவர்களை மீட்டபின் இறுதியாக மூவரையும் இடித்து தள்ளிய ஆட்டோ ஓட்டுநரையும் மீட்டுள்ளனர்.
பின் அவர்களை மருத்துவ உறுதி மூலமாக அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜை ஆடை மாற்றி அழைத்துச் சென்று, ஆல்கஹால் மீட்டரை வைத்து மது குடித்துள்ளாரா? என்று சோதனை நடத்தியுள்ளனர்.
ஆனால் சோதனையின் போது மோகன்ராஜ் உஷாராக ஆல்கஹால் மீட்டரில் வாய்வைத்து ஊதாமல் இருந்துள்ளார். இதன்பின் காவல்துறையினர் ஊதுமாறு கூறியதால், வாய் வைத்து ஊதிய அவர் புல் போதையில் இருப்பது தெரிய வந்தது. மது போதையில் ஆட்டோ ஓட்டி களேபரத்தை ஏற்படுத்தியதால் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.