மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்கு வாங்கி தராததால் நண்பனை கத்தியால் குத்திய போதை ஆசாமி கைது!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அண்ணா நகரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சத்தியமூர்த்தி கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சத்தியமூர்த்தி தனது நண்பர்களான செல்வம், விக்னேஷ் குமார், சேகர் ஆகியோருடன் சேர்ந்த அண்ணா நகர் பின்புறம் உள்ள பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது மது காலியாகிவிட்டதால் மீண்டும் வாங்கித் தருமாறு செல்வம், சத்தியமூர்த்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு சத்தியமூர்த்தி வாங்கித் தர முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் கத்தியால் சத்தியமூர்த்தி உள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் உடனடியாக சத்தியமூர்த்தியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.