மது போதையில் தகராறு செய்த போதை ஆசாமி.. தட்டிக்கேட்ட காவலருக்கு நேர்ந்த கொடூரம்!



Drunken boy attack police in Vellore

வேலூர் அருகே மது போதையில் தகராறு செய்த போதை ஆசாமியை எச்சரித்த காவலரை தாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண் கண்மணி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம் அருகே நவீன் குமார் என்ற இளைஞர் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

vellore

இதனைப் பார்த்த அருண் கண்மணி, அந்த போதை ஆசாமியை எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நவீன் குமார், காவலர் அருள் கண்மணியின் முகம், கழுத்து, காதுகளில் பிளேடால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

மேலும், அவரை ஆபாசமாக பேசியதுடன், தடுக்க வந்த பொது மக்களையும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் நவீன் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் கூடுதல் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

vellore

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நவீன் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.