மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபோதையில் தகராறு நண்பரின் மூக்கை கடித்த போதை ஆசாமி!
வேலூர் அருகே மது போதையில் நண்பரின் மூக்கை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக மதுப்பழக்கத்தால் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மது அருந்தும்போதே ஒருவருக்கொருவர் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் மகன். இவர் நேற்று நள்ளிரவில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தாயம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சக நண்பரான முனுசாமி என்பவர் மதனின் முகத்தை கடித்துள்ளார். இதனால் பாதி மூக்கு காயமடைந்த நிலையில் மதன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முனுசாமி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.