மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபோதையில் ஏற்பட்ட தகராறு.. தலையில் கல்லை போட்டு கொலை!
சென்னை மாதவரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் வேளவேந்தன். அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவசங்கரன் மற்றும் வேளவேந்தன் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மாதவரம் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் இருக்கையில் தூங்க சென்றுள்ளனர்.
அப்போது ஒரு இருக்கை மட்டுமே காலியாக இருந்ததால், அந்த இருக்கையில் நான்தான் படுப்பேன் எனக்கூறி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனிடையே வேளவேந்தன் இருக்கையில் படுத்து கொண்டதால், சிவசங்கரன் பக்கத்திலேயே தரையில் படுத்துக்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன், வேளவேந்தன் தலையில் கல்லை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த வேளவேந்தனை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேளவேந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசங்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.