மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதை தந்தையால் 2 மாத கைக்குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.. கதறும் தாய்.!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் அஞ்சலி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும், ஒரு 2 மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இதில் கடந்த 10 நாட்களாக சுரேஷ் தனது குடும்பத்தினருடன் திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் கீழ் தங்கி பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து கடையில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் 2 மாத குழந்தை பசியில் அழுதுள்ளது. அப்போது போதையில் இருந்த சுரேஷ் தனது மனைவியை எழுப்பி பால் கொடுக்க கூறியுள்ளார். ஆனால் அஞ்சலி மறுப்பு தெரிவித்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷுக்கும் அஞ்சலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது இரண்டு மாத குழந்தையின் காலை பிடித்து தூக்கி தரையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் குழந்தை படுகாயமடைந்து கதறி துடித்துள்ளது. இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.