மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி என்று நினைத்து, மதுபோதையில் மகனிடம் மோசமான செயல்.! தந்தை அட்டூழியம்.!
மதுபோதையில் உறங்கிக்கொண்டிருந்த மகனின் தலையில், தந்தை அம்மிக்கல்லை போட்டு கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவர் செங்கல் சூலையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்து சில தினங்களுக்கு முன்னதாக வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தனது மனைவியிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
கோபமுற்ற மனைவி "பணம் தரமுடியாது" என்றதால், மனைவியிடம் முருகன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த முருகன், மனைவி என நினைத்து உறங்கிக் கொண்டிருந்த மகன் அர்ஜுன் தலையின் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அர்ஜுன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, கொலை செய்த முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.