மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினமும் குடி, தகராறு.. திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபரீதம்.. கண்ணீரில் புதுமணப்பெண்.!
மதுபோதைக்கு அடிமையான குடிகாரன் திருமணம் செய்த 3 மாதத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டான்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கங்கா நகரில் வசித்து வருபவர் கலையரசன் (வயது 34). இவர் லாரி லோடு மேனாக பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக கலையரசனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
மதுபோதைக்கு அடிமையாகி இருந்த கலையரசன், தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், அவ்வப்போது போதையில் தகராறில் ஈடுபடுவதும் வழக்கம்.
இந்த நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் கலையரசன் வீட்டிற்கு வருகை தந்த நிலையில், கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்துபோன கலையரசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.