பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
காதல் கணவன் போதையில் மட்டையாகி மரணம்.. மனைவி கண்ணீர் குமுறல்.!
கணவர் மதுபோதையில் கடை முன்பு கிடந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மனைவிக்கு தெரியவந்ததையடுத்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தின் அருகாமையில் உள்ள கோட்டநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் சரவணமுருகன் (வயது 36). இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 26).
இவர்கள் இருவரும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த போது, காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சரவணமுருகன் வீட்டிற்கு சரியாக வருவதை தவிர்த்துள்ளார்.
இதனால் ராஜலட்சுமி அவரை கண்டித்த நிலையில், சம்பவ தினத்தன்று வெளியே சென்றவர் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். தொடர்ந்து ராஜலட்சுமியின் உறவினர் ஒருவர் சரவணமுருகன் ஆர்.ஆர்.நகரில் உள்ள ஒரு கடையின் முன்பு படுத்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், ராஜலட்சுமி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் எவ்வித அசைவுமின்றி கிடந்ததைக் கண்டு, பயந்துபோன ராஜலட்சுமி 108 மருத்துவ ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவஊர்தி ஊழியர் சரவண முருகனை பரிசோதித்தபோது, அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சரவணமுருகனின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மனைவி இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.