மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிபோதையில் அலப்பறை.. ஏய்., நான் போலீசு.. காவல் அதிகாரி அலப்பறை.. வைரல் வீடியோ.!
மதுபோதையில் காவல் அதிகாரி பேருந்து பெண் பயணிகளிடம் அத்துமீறி, பிற பயணிகளிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
சென்னையில் உள்ள வண்டலூரில் இருந்து கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் செல்லும் 70 V மாநகர பேருந்து, கடந்த 29 ஆம் தேதி இரவு வேளையில் கோயம்பேடு சென்றுகொண்டு இருந்தது.
பேருந்தில், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், மதுபோதையில் பேருந்தில் ஏறிய காவல் அதிகாரி ஒருவர், பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பெண்ணுடன் வந்திருந்த நபர் இதனை தட்டிகேட்கவே, மதுபோதையில் இருந்த காவல் அதிகாரி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் பேருந்திற்குள் சலசலப்பு எழுந்துகொள்ள, பொறுமையாக இருந்த பேருந்தின் ஓட்டுநர் ஒருகட்டத்தில் காவல் அதிகாரியை கண்டிக்க தொடங்கினார்.
இதனையடுத்து, பேருந்தின் நடத்தினரிடமும் காவல் அதிகாரி வாக்குவாதம் செய்யவே, பயணிகள் அனைவரும் அவரை இறக்கிவிட்டு பேருந்தை இயக்கக்கூறி குரலை உயர்த்தினார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.