ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இவருக்குத்தான் வெற்றி., சந்தேகமே வேண்டாம் - அடித்துக்கூறும் துரை வைகோ..! 



Durai Vaiko About Erode By Poll Victory

 

மத்திய பட்ஜெட் ஏமாற்றமளிக்கும் வகையில் மட்டுமே இருந்தது. எம்.ஜி.ஆர் கண்ட பெரும் இயக்கம் பிளவுபடாமல் பார்க்கப்படவேண்டும் என்பதே எங்களின் கருத்து என துரை வைகோ பேசினார்.

திருப்பத்தூரில் வசித்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் துரை வைகோ, "எந்த விதமான சந்தேகமும் இல்லாமல், எங்களுடைய மதச்சாற்பற்ற ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிவாய்ப்பு இருக்கின்றது. மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 

அதிமுக நான்கு பிரிவாக பிரிந்து இருப்பதாக கூறினார்கள். அது அவர்களின் பிரச்சனை, அதில் நாம் தலையிட்டு கருது கூற இயலாது. அஇஅதிமுக என்பது எம்.ஜி.ஆர் கண்ட மாபெரும் இயக்கம். ஜனநாயக முறைப்படி அதனை பிளவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு யார் காரணம்? யார் பலனடைவார்கள்? என்பதை அக்கட்சியின் தொண்டர்கள் புரிந்து செயல்பட வேண்டும். 

Durai Vaiko

மத்திய பட்ஜெட் எதிர்பார்த்த அளவு இல்லை. ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. தமிழகத்திற்கு என பெரிய அறிவிப்புகள் இல்லை. சில மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டாக இது இருக்கிறது. தமிழகத்திற்கு என எதுவும் ஒதுக்கவில்லை. விவசாயத்திற்கு அவர்கள் ஏதும் செய்யவில்லை. 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாடுவிட்டு, மத்திய பட்ஜெட்டில் அது குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. பல தலைவர்கள் அதற்கு கண்டனத்தையும் தெரிவித்து விட்டார்கள். விவசாயத்திற்கு தேவைப்படும் உரத்தின் விலை கடந்த 8 ஆண்டுகளில் 400 மடங்கு உயர்ந்துள்ளது. அதன் விலையை கட்டுப்படுத்த பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் தான்" என பேசினார்.