மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி.! மு.க.ஸ்டாலின் எப்போது பதவி ஏற்கிறார் தெரியுமா.?
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. முதல்வர் வேட்பாளராக 5 பேர் களமிறங்கினர். அதில் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். ஆனாலும் ஆட்சியை பிடிக்க வேண்டிய பெரும்பான்மை இடங்களை இழந்தது அதிமுக.
வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியமைக்கவுள்ளது.
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 7ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.