96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிறக்கும் போதே கால்களை வெட்டி குழந்தையை கொன்ற தாய்.. பிரசவத்தில் கொடூரம்.!
தனியார் மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டதால் 7 மாத சிசு உயிரிழந்து அவரும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்.
சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் தனது காதலருடன் ஒன்றாக ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் அவர் கர்ப்பமாகி இருக்கிறார். தற்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. திருமணம் ஆகாத காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று நினைத்த அவர் வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் குழந்தையின் கால்களை பிரசவத்தின் போது வெட்டி இருக்கிறார். இதில் குழந்தை உயிரிழந்துள்ளது. நிலைமை மோசமான நிலையில் அந்த பெண்ணும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இது பற்றி எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.