மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தம்பி பட்டுனு அடிச்சதுல பொட்டுனு போன அண்ணன்... போதையால் நேர்ந்த விபரீத கொலை.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதையில் ரகளை செய்த அண்ணனை தம்பி கட்டையால் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ரியாஸ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிப்(48). இவருக்கு அசரத்(22) மற்றும் ரியாஸ்(20) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் இவரது மூத்த மகனான அசரத் நேற்று மது போதையில் அக்கம்பக்கத்தினருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவரது தம்பி ரியாஸ் சமரசம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் மீண்டும் அசரத் தகராறு செய்ததால் அவரது தலையில் கட்டையால் தாக்கியிருக்கிறார் ரியாஸ். அப்போது மயங்கி விழுந்த அசரத்தை வீட்டிற்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்துள்ளனர்.
காலையில் நீண்ட நேரம் ஆகியும் அசரத் எழும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அசரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு அவரை கொலை செய்த தம்பி ரியாசை கைது செய்தனர்.