மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய் குளிப்பதை வீடியோ எடுத்து மகளிடம் டீல் பேசிய எஞ்சினியர்.! உடந்தையாக இருந்த அக்கா.! அதிர்ச்சி சம்பவம்.!
பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வன். பொறியியல் பட்டதாரியான இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அதே கிராமத்தில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில், சம்பவத்தன்று 32 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் குளித்து கொண்டிருந்ததை செல்வன் மறைந்து இருந்து தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை செல்வன் அந்த பெண்ணின் 15 வயதுடைய மகளுக்கு வாட்ஸப்பில் அனுப்பி சிறுமியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும், இல்லையென்றால், உன் தாயின் குளியல் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்வனின் இந்த செயலுக்கு அவரது அக்கா உறவுமுறை கொண்ட மலர்கொடி என்பவர் உதவி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்வன் மற்றும் மலர்கொடி மீது போக்சோ, பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.