வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பகீர்... கழுத்தறுக்கப்பட்டு நிலையில் பொறியாளர் சடலமாக மீட்பு... தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் காவல்துறை.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொறியாளர் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் விஜயராகவன்(48). பிச்சை ஓய்வு பெற்ற நில அளவையாளர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். விஜயராகவனுக்கு 2004 ஆம் ஆண்டு சுவாதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அவரை விவாகரத்து செய்த விஜயராகவன் 2014 ஆம் ஆண்டு வைஷ்ணவி என்பவரையும் திருமணம் செய்துள்ளார்.
வைஷ்ணவியும் இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார் விஜயராகவன். மதுப் புழக்கத்திற்கு அடிமையான இவர் தனது வீட்டில் இருந்து 100 அடி தொலைவில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வங்கி அறிவுரையில் துணை கண்காணிப்பாளர் ராகவி தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.