மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ! என் தம்பிக்கு என்ன ஆச்சோ! பதறியடித்து மகனை அனுப்பிய அக்கா! அங்கு அவர் கண்ட நடுநடுங்கவைத்த காட்சி!
கோவை சுந்தராபுரம் அருகே கல்லுக்குடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். 42 வயது நிறைந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அழகு. இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சக்திவேலுக்கு, அவருடைய மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவர் தனது மகளை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து தனித்து வாழ்ந்து வந்த சக்திவேல் தனது அக்காவிடம் மட்டுமே அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக சக்திவேல் அவரது அக்காவிடம் பேசவில்லை. இதனால் அச்சமடைந்த அவர் தனது மகன் தினேஷ் என்பவரை கோவைக்கு அனுப்பி சக்திவேலை பார்த்து வருமாறு கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து கோவைக்கு விரைந்த தினேஷ், சக்திவேல் வீட்டில் சென்று பார்த்தபோது அங்கு உடல் தீயில் எரிந்த நிலையில் எலும்புக் கூடாக சக்திவேல் கிடந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சக்திவேல் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அப்பொழுது சக்திவேலுக்கு அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்தது என்பதும், அதனைக் கண்டித்து அப்பெண்ணின் கணவர் சக்திவேலிடம் தகராறு செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் சக்திவேலை அப்பெண்ணின் கணவர் தான் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் 8 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சக்திவேல் இரண்டு நான்கு மாதங்கள் ஆகியிருக்கலாம் எனவும் அவரது உடல், காகிதம், தேங்காய் சிரட்டை மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.