மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விறகு கட்டையால் தாக்கி இன்ஜினியர் கொலை... நண்பர்கள் தலை மறைவு ... போலீஸ் வலைவீச்சு!
நெய்வேலியில் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள கொலையாளியையும் அவரது நண்பர்களையும் காவல்துறை தேடி வருகிறது.
கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் என்எல்சி சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜேந்திரன் வயது 28. இவருக்கு திருமணமாகி நான்கு மாதம் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. ராஜேந்திரன் இன்ஜினியராக இருந்து வந்தார்.
நேற்று மதியம் ராஜேந்திரன் தனது நண்பர்களான பிரேம்குமார், செல்லப்பா உத்தண்டி மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் நெய்வேலி 16 வது வட்டத்தில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செல்லப்பா ஹோட்டலில் இருந்து விறகு கட்டையை எடுத்து ராஜேந்திரனை பலமாக தாக்கியதில் அவர் சம்பவி இடத்திலேயே பலியானார் .
ராஜேந்திரன் பலியானதை தொடர்ந்து அவரது நண்பர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். மேலும் இந்த கொலையை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.