கடனை அடைக்க மூதாட்டி நகைக்கு குறி; கொலை வழக்கில் தம்பதி கைது.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர், தொட்டம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் யசோதா (வயது 64). இவருக்கு மகள்கள், மகன் இருக்கின்றனர். இவர்கள் அனைவர்க்கும் திருமணம் முடிந்து, தங்களின் குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
இதனால் யசோதா தனது வீட்டில் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை நேரத்தில் நீண்ட நேரம் ஆகியும், வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினரில், காமராஜ் என்பவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது யசோதாவின் இறப்பு உறுதி செய்யப்பட, தகவல் அவரின் மகன், மகள்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்தவர்கள் தாயின் உடலை கண்டு கதறியழுதனர். மேலும், தாயின் கழுத்தில் இருந்த சங்கிலி, கம்மல் ஆகியவை மாற்றப்பட்டு கவரிங் நகை இருந்தது உறுதியானது.
நகைக்காக நடந்த கொலை என்பதை உறுதி செய்த குடும்பத்தினர், பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
விசாரணையில், யசோதாவின் வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டில் 3 மாதங்களுக்கு முன் பழனிச்சாமி (வயது 37), மனைவி தேவி (வயது 30) ஆகியோருடன் குடித்தனம் வந்துள்ளார். இவர் நகைக்காக யசோதாவை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில், கடன் தொல்லை கழுத்தை நெரித்த காரணத்தால், மூதாட்டியின் நகையை திருடி விற்பனை செய்து கடனை அடைக்கலம் என எண்ணி இருக்கின்றனர். சம்பவத்தன்று தங்களின் திட்டப்படி நகையை திருடச்சென்று, மூதாட்டியை கொலை செய்து நகையை திருடியுள்ளனர்.
பின் அன்னகைக்கு பதில் கவரிங் நகையை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இறுதியில் காவல்துறையினர் தங்களை கைது செய்து விட்டதாக கூறினர்.