ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
#Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்; அதிரடி உத்தரவு.!

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக இருந்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால், அத்தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி மாதம் 05 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி, திமுக வசம் கூட்டணிக்கட்சி என்ற முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திமுகவின் வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக, அமைச்சர் முத்துசாமி முழுவீச்சில் களப்பணியாற்றி வருகிறார்.
திமுக Vs நாதக நேரடி மோதல்
அவரை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என எந்த எதிர்க்கட்சியும் போட்டியிடாத நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: அதிமுக முக்கியப்புள்ளி அமைச்சர் முன்பு திமுகவில் இணைவு.. ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்.!
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி, இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஓசூர் மாநகராட்சி ஆணையராக இருந்த நிலையில், தற்போது ஈரோடு இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்தும் பொறுப்பில் இருந்த மணீஷ், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம்? - இறுதி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!