ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
#Breaking: அதிமுக முக்கியப்புள்ளி அமைச்சர் முன்பு திமுகவில் இணைவு.. ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 05ம் தேதி நடைபெறுகிறது. பிப்.08 ம் தேதி முடிவு வெளியாகிறது. காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி, இடைத்தேர்தலில் திமுக வசம் சென்றது. இதனால் திமுக வேட்பாளராக சந்திர குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார்.
பொறுப்பில் இருந்து நீக்கம்
இடைத்தேர்தல் என்பதால் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் புறக்கணிக்கப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதிமுகவைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவர், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு வாங்கினார். இதனால் கட்சியின் தலைமை அவரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டு இருந்தது.
இதையும் படிங்க: #Breaking: "கேமிரா மட்டும் இல்ல, காலிலேயே விழுந்திருப்பர்" - அமைச்சர் மூர்த்தியை கலாய்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!
திமுகவில் இணைந்தார்
இந்நிலையில், கட்சியின் விதிமுறைக்கு எதிராக செயல்பட்ட செந்தில் முருகன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் திமுகவில் இணைந்து இருக்கிறார். அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டவர், ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.சி சந்திரக்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில்.!