திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கு?.. அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அன்புமணி இராமதாஸ்.!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள் மார்ச் மாதம் 2ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் மீண்டும் மோதுகின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் அதன் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் களம் காண்கிறது. அதிமுக சார்பில் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடைத்தேர்தல் என்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் நடவடிக்கை என்று பாமக கருதுகிறது என்பதால், ஈரோடு இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை, போட்டியிடவும் இல்லை என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.