மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீ என்னைத்தான் காதலிக்கனும்.. பட்டா கத்தியுடன் சில்வண்டுகள் பதைபதைப்பு செயல்..!
15 வயது சிறுமியை காதலிக்க சொல்லி மிரட்டிய 3 காம கொடூரன்கள் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், வாய்கால்ரோடு பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அதே பகுதியை சேர்ந்த இளைஞர், நீ என்னை காதலிக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்.
இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த இளைஞன் நீ என்னை காதலிக்கவில்லை என்றால் குடும்பத்தோடு கொலை செய்திடுவேன். உனது புகைப்படத்தை ஆபாசமாக மாபிங் செய்து வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறான்.
மேலும், இடுப்பில் பட்டா கத்தியுடன் இருப்பதுபோன்ற வீடியோவையும் சிறுமிக்கு அனுப்பி வைத்துள்ளான். இதனை சிறுமி தாயிடம் தெரிவிக்கவே, அவர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மிரட்டிய மௌலி ரஞ்சித், அவரின் நண்பர்கள் தௌபீக், தன்ஸீல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.