மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா பரவல் திமுக தமிழக அரசால் நிறுத்திவைப்பு? இளைஞரின் சர்ச்சை வீடியோ வைரல்.!
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல், கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து, பள்ளி - கல்லூரிகள் திறப்பு, இரவு நேர ஊரடங்கு ரத்து என மக்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னணியில், எதிர்வரும் நகர்ப்புற தேர்தல் இருக்கிறது என்றும், அதற்காகவே தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை குறைந்து காண்பித்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கியுள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், Fareed Talkz என்ற சமூக வலைதள கணக்கை கொண்ட இளைஞர் வெளியிட்டுள்ள காணொளியில், "முட்டாள் தனமான செய்திகள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கொரோனா பரவல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருவதால் தங்களின் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என கொரோனாவுக்கும், ஓமிக்ரானுக்கும் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, வைரஸ் தனது பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறது.
#BREAKING : உள்ளாட்சி தேர்தல் காரணமாக கொரானா பரவல் தற்காலிகமாக ஒத்திவைப்பு
— தொண்டைநாட்டு இளவரசன் (@Thondainadu) January 29, 2022
நகர்ப்புற தேர்தலையொட்டி கொரோனா பரவல் தள்ளிவைக்கப்படுகிறது. அதனாலேயே அரசு தளர்வுகள் அளித்துள்ளன.. இளைஞர் #FareedTalkz என்பவரின் திமுக அரசுக்கு எதிரான வீடியோ. pic.twitter.com/XKnRB6zMVa
இதுகுறித்து அரசுக்கு கொரோனா மற்றும் ஒமிக்ரான் வாக்குறுதி அளித்துள்ளதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு தேவையில்லை எனவும், இந்த வருடத்திற்கான பள்ளி - கல்லூரிகளுக்கான கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் பிப் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. ஏற்கனவே கொரோனா மதுபானக்கடைக்கு செல்லமாட்டேன், வழிபாட்டு தலங்களுக்கு செல்வேன் என கூறி இருந்ததால், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் வார இறுதியில் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
கொரோனா அரசுக்கு நான் பரவமாட்டேன் என் உறுதி அளித்துள்ளதால், வழிபாட்டு தலங்களுக்கு சென்று வரவும் மக்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் போன்ற வைரஸ் எப்போது பரவும் என்ற தேதி தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும்" என்று வீடியோவில் கூறி இருக்கிறார். இளைஞரின் இந்த காணொளி தமிழக அரசு மக்களுக்காக வழங்கியுள்ள தளர்வுகளுக்கு எதிராக இருக்கிறது என்றும், கொரோனா பரவல் குறைந்ததால் மட்டுமே அரசு தளர்வுகளை வழங்கியுள்ளது என்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் ஆதரவாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.