மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவசர அவசரமாக தனது 4 வயது மகளுடன் மாடியிலிருந்து குதித்த தந்தை! வெளியான பதறவைக்கும் பகீர் காரணம்!
மதுரவாயல், பொன்னியம்மன் மேடு பகுதியில் வசித்து வந்தவர் திருப்பதி இவரது மனைவி சுனிதா. இவர்களுக்குத் 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 4 வயதில் ஹரிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. திருப்பதி பாரிஸ் கார்னரில் உள்ள கடை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருப்பதிக்கு மனஅழுத்த நோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் கடந்த இரு வருடங்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சமீப காலமாக அவர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் சரியாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளததால் அவருக்கு மதியம் திடீரென அதிக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை கவனிக்காது திருப்பதியின் மனைவி வீட்டுவேலைகளில் பிசியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென தனது 4 வயது மகள் ஹரிகாவுடன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று, மகளுடன் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஹரிகா இரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் உயிருக்குப் போராடியபடி கிடந்த திருப்பதியை அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் கணவரையும் மகளையும் பறிகொடுத்த மனைவி கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.