சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
என் மகனுக்கு கல்யாணமே ஆகலை.. மாமனார் செய்த பக்கா மோசடி.! அதிரடியாக மருமகள் செய்த காரியம்!!

தனது மகனுக்கு திருமணமே ஆகவில்லை என பொய்யான ஆதாரங்களை தயார் செய்து 5 கோடி மதிப்புள்ள சொத்தை மாமனார் அபகரிக்க முயன்றதாக மருமகள் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரவள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் 45 வயது நிறைந்த பாரதி. அவரது கணவர் விஜயகுமார். அவர் 2007 ஆம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் காலமானார். இந்நிலையில் பாரதி காவல் ஆணையர் அலுவலகத்தில் மாமனார் மீது குற்றம்சாட்டி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர், தனது கணவர் விஜயகுமார் பெயரில் பெரவள்ளூரில் 5 கோடி மதிப்புமிக்க நிலத்துடன் கூடிய வீடு உள்ளது. அவர் 2007 ல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் விஜயகுமாரின் தந்தையும், தனது மாமனருமான மாதவரத்தில் வசித்து வரும் 71 வயது நிறைந்த செங்கோடன் தனது மகனுக்கு திருமணமாகவில்லை என்று போலியான வாரிசு சான்றிதழ், ஆவணங்கள் தயார் செய்து அவரது பெயரில் இருந்த நிலத்தை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீதும், அவருக்கு துணையாக இருந்த நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நில மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இதில் பாரதி கூறிய அனைத்தும் உண்மை என தெரிய வந்தநிலையில், செங்கோடன் மற்றும் அவரது நண்பர் கானாத்தூர் லோகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன.