மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை வீட்டிற்கு அழைத்த கணவன்.! திடீரென ஏற்பட்ட தகராறு.! மகள் மீது உள்ள பாசத்தால் மாமனார் செய்த கொடூரச்செயல்.!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தை சேர்ந்த சிவதான பகுதியை சேர்ந்தவர் சுதாகர். 35 நிரம்பிய கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகள் மாதம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மாதம்மாள் கணவரை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு சுதாகர் பலமுறை அழைத்தும் மாதம்மாள் செல்ல மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், நேற்று காலை சுதாகர் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி மாதம்மாளை அழைத்துள்ளார். பிடிவாதமாய் கணவனுடன் செல்ல மாதம்மாள் மறுக்க ஆத்திரமடைந்த சுதாகர் மனைவியை அடித்துள்ளார். இதனைப்பார்த்த சுதாகரின் மாமனார் சீனிவாசன், கத்தியை எடுத்துச் சென்று மருமகன் சுதாகரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சுதாகர் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சுதாகரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மாமனார் சீனிவாசனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.