#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: தமிழ்நாட்டில் முதல் முறை... பனைமரம் வெட்டிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு.!
தமிழ்நாட்டில் மாநில மரமாக கருதப்படும் பனைமரங்களை வெட்டி அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி என்பது பெற வேண்டும். இல்லாத பட்சத்தில் தகுந்த ஆதாரத்துடன் புகார் அளித்தால், வழக்குப்பதிவு செய்யவும் சட்டத்தில் இடம் உண்டு.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றிய வருபவரின் கணவர் பூமிநாதன். இவர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த பனைமரத்தினை வெட்டி அகற்றி இருக்கிறார்.
இதனால் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் எடையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர், குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பூமிநாதனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார்.