மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தங்கம் விலை சவரனுக்கு அதிரடி குறைவு.. மாஸ் காட்டிய வெள்ளியின் விலை.. நகை வாங்க நினைத்தவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை பிரச்சனை காரணமாக, தங்கத்தின் விலை குறைந்தே காணப்பட்டது. ஆனால், இந்தியாவில் மத்திய-மாநில அரசின் வரிகளால் என்றும் அது உச்சத்திலேயே இருந்தது.
2024 பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருவதற்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த பல மாதமாக உச்சத்தில் இருந்த சமையல் எரிவாயு விலை திடீரென அதிரடியாக குறைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரூ.45 ஆயிரத்தை தாண்டி இருந்த தங்கத்தின் விலை மீண்டும் இறங்குமுகமாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரேமாதத்தில் ரூ.2,160 குறைந்து இருக்கிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து, ரூ.42,340க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.66 குறைந்து ரூ.5,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து, ரூ.73.50 க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.2000 குறைந்து ரூ.73,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவு, அதனை வாங்க நினைத்த நபர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.