திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு கல்லூரிகளில் மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த வருடம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 16 ஆம் தேதி வெளியானது.
இந்தநிலையில் மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இணையதள வாயிலாக ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.tngasa.in மற்றும் www.dceonline.org என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் இணையதள வாயிலாக சான்றிதழ்களை ஜூலை 25ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பதிவேற்றலாம். பொதுப்பிரிவினர் 50 ரூபாய் விண்ணப்ப கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்தலாம். இதில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.