மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்வு முடிந்ததும் மேசை, நாற்காலியை அடித்து உடைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்..! அதிகரிக்கும் 2k கிட்ஸின் அட்டகாசங்கள்..!!
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஹள்ளி அ.மல்லாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நடைபெற்ற முடிந்தது. இதனால் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் தங்களின் வகுப்பறையில் இருக்கும் பெஞ்ச், நாற்காலி, மேசை, மின்விசிறி, மின் பொத்தான்கள் மற்றும் பிற தளவாடப் பொருள்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர்.
சத்தம் கேட்டுவந்த தலைமையாசிரியர் முத்துச்சாமி பார்வையிட்ட போது, சம்பவம் உறுதியாகவே, இதனை அவர் கண்டித்தும் பலனில்லாததால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவலளித்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ந்த பெற்றோர்கள் பள்ளியில் உள்ள மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் தங்களது பிள்ளைகளை கண்டித்தனர். மேலும் இதுபோன்று இனிவரும் நாட்களில் நடக்காது என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.