"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
5,529 காலி பணியிடங்கள்; 11.78 லட்சம் தேர்வர்கள்... குரூப் 2 பதவிக்கு வரும் 21ம் தேதி முதல் நிலை தேர்வு..!
5520 காலிப்பணியிடங்களுக்கு வருகின்ற 21 ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வை 11.28 லட்சம் பேர் எழுதுகின்றனர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 நேர்முக பதவி 116 இடங்களும், 2ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவி 5413 இடங்கள் என மொத்தம் 5520 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அரசு பணியாளர் தேர்வாணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. 11 லட்சத்து 78 எட்டாயிரத்து 175 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இளநிலை முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டி போட்டு அனைவரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுக்கான முதல் நிலை தேர்வு, வருகின்ற 21 தேதி சனிக்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் நாலாயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் அரசு பணியாளர் தேர்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் அதிரடி சோதனை நடத்தவும் அரசு பணியாளர் தேர்வு மையம் திட்டமிட்டுள்ளது.