திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னையை திடீரென தாக்கிய சூறைக்காற்று; பலத்த இடியுடன் கூடிய கனமழை - வீடியோ உள்ளே!!
சென்னை அண்ணா நகர், பாடி, அம்பத்தூர் பகுதிகளில் இன்று மதியம் திடீரென வீசிய சூறை காற்றால் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
இன்று மதியம் மூன்று மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வழக்கம்போல் சிறிது நேரம் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென புயல் போன்ற பலத்த சூறை காற்று வீச ஆரம்பித்தது. பின்னர் சற்று நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சுமார் அரை மணி நேரம் வீசிய இந்த சூறைக் காற்றில் மரங்கள் அனைத்தும் முறிந்து விழும் அளவிற்கு பலத்த காற்று வீசியது. மேலும் பலத்த சத்தத்துடன் இடியும் மின்னலுமாக மழை கொட்டி தீர்த்தது.
சூறைக்காற்றுடன் வீசிய பலத்த கனமழையின் வீடியோ பதிவு இதோ உங்களுக்காக.