இனி கட்டணமின்றி தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை..! பீலா ராஜேஷ்.



here-after-all-private-recharge-freely-take-corona-test

தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கான செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனைக்காக இதுவரை தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் ₹4500 வரை வசூல் செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து இடங்களிலும் இலவசமாகப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியது. 

Private hospital

அதனை அடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், இனி தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கான செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற முடிவை முதல்வர் எடுத்துள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.